/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு
/
கால்வாயில் மிதந்த மூதாட்டி சடலம் மீட்பு
ADDED : செப் 07, 2024 07:41 AM
பொன்னேரி : பொன்னேரி அடுத்த கொக்குமேடு பகுதியில் உள்ள ஓடைக்கால்வாய் பகுதியில், நேற்று முன்தினம் இரவு துர்நாற்றம் வீசியது. இதனால் அவதியுற்ற அப்பகுதிவாசிகள் கால்வாய் அருகே சென்று பார்த்தபோது, பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருப்பதை கண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கால்வாய் தண்ணீரில் மிதிந்த சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்த பெண் குறித்து விசாரணை மேற்கொண்டதில், அவர், அதே பகுதியை சேர்ந்த கோகிலா, 75, என்பது தெரிந்தது.
இவர் கடந்த, 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தேடி வந்த நிலையில், ஓடைக்கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இருப்பதும் தெரிந்தது.
கால்வாய் நீரில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.