/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடலுாரில் தொலைத்த வெள்ளி அரக்கோணம் ரயில் நிலையத்தில் மீட்பு
/
கடலுாரில் தொலைத்த வெள்ளி அரக்கோணம் ரயில் நிலையத்தில் மீட்பு
கடலுாரில் தொலைத்த வெள்ளி அரக்கோணம் ரயில் நிலையத்தில் மீட்பு
கடலுாரில் தொலைத்த வெள்ளி அரக்கோணம் ரயில் நிலையத்தில் மீட்பு
ADDED : ஏப் 29, 2024 06:35 AM
அரக்கோணம்: நாகர்கோவிலில் இருந்து காசி வரை செல்லும் தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று முன்தினம் மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் பயணம் செய்தார்.
இதையடுத்து, விழுப்புரத்திற்கு முன் உள்ள கடலுார் ரயில் நிலையத்தில் இறங்கினார். அப்போது, தனது பையை ரயிலில் தவற விட்டார்.
இது தொடர்பாக, அவர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, அரக்கோணம் வந்த ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில், அரை கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வெள்ளி பொருட்களை மீட்ட போலீசார் பொன்ராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் கூறுகையில், 'விசாரணைக்குப் பின் பொன்ராஜுடம் வெள்ளி பொருட்கள் ஒப்படைக்கப்படும்' என்றனர்.