/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவேங்கிடபுரத்தில் நாய்கள் தொல்லை குடியிருப்புவாசிகள் போலீசில் புகார்
/
திருவேங்கிடபுரத்தில் நாய்கள் தொல்லை குடியிருப்புவாசிகள் போலீசில் புகார்
திருவேங்கிடபுரத்தில் நாய்கள் தொல்லை குடியிருப்புவாசிகள் போலீசில் புகார்
திருவேங்கிடபுரத்தில் நாய்கள் தொல்லை குடியிருப்புவாசிகள் போலீசில் புகார்
ADDED : ஜூன் 07, 2024 01:57 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம் பகுதியில் உள்ள தெருக்களில், கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றி திரிகின்றன. குறிப்பாக, குப்பை தொட்டிகள் உள்ள பகுதிகளில் அதிகளவில் இருக்கின்றன.
இவை, ஒன்றுடன் ஒன்று சண்டை போடும் போது பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை அச்சுறுத்துகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன.
திருவேங்கிடபுரம் அன்னை இந்திரா தெருவில், குப்பை தொட்டி அருகே சுற்றித்திரியும் நாய் ஒன்று, இதுவரை 10 பேரை கடித்துள்ளது. அதேபோல், பொன்னியம்மன் நகரில் தனிநபர் ஒருவர், 10க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார்.
நாள் முழுதும் வீட்டின் உள்ளே அடைத்து வைத்துவிட்டு, இரவு நேரங்களில் இவற்றை வீட்டின் வெளியே தெருக்களில் விடும்போது, அவை ஆக்ரோஷமாக சுற்றி திரிகின்றன. இதுவரை அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் நாய் கடிக்கு ஆளாகி, சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதே வீட்டில் நாய்கள் மட்டுமின்றி, பறவைகளும் உள்ளன. நாய் மற்றும் பறவைகளின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது தொடர்பாக, குடியிருப்புவாசிகள் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர்.
புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாய்களால் தெருக்களில் நடந்து செல்வதற்கே அச்சமாக உள்ளது. சென்னையின் பல இடங்களில் சாலையில் சென்ற குழந்தைகளை தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்களை காணும்போது, குழந்தைகளை வெளியில் அனுப்பவதற்கு தயக்கமாக உள்ளது.
எனவே, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் குறித்து கண்காணிக்கவும், தெருக்களில் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.