/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காக்களூரில் தொலைபேசி நிலையம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
காக்களூரில் தொலைபேசி நிலையம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
காக்களூரில் தொலைபேசி நிலையம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
காக்களூரில் தொலைபேசி நிலையம் அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : ஆக 30, 2024 12:06 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சி, நகராட்சி அருகில் அமைந்துள்ளது. இப்பகுதியில், ஆஞ்சநேயர்புரம், மாருதிநகர் நியூ டவுன், பூங்கா நகர், புட்லுார், தண்ணீர்குளம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
நகராட்சி எல்லைக்கு அருகில் இருப்பதால், வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.
மேலும், காக்களூர் தொழிற்பேட்டையில், 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் வாயிலாக, ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில், 200க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் உள்ளன.
அடிக்கடி தொலைபேசி இணைப்புகள் பழுதாகி விடுகின்றன.
திருவள்ளூர் தொலைபேசி அலுவலகத்தில் புகார் செய்தாலும், பழுது நீக்குவதில் காலதாமதம் ஏற்படுவதால், பலரும் தங்களது தொலைபேசி இணைப்புகளை ஒப்படைத்து வருகின்றனர்.
எனவே, காக்களூர் பகுதியில் தனியாக தொலைபேசி நிலையம் அமைத்து, புதிய இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆஞ்சநேயர்புரம், பாலாஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், மத்திய தொலை தொடர்பு துறைக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.