/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை, கழிவுநீரால் துர்நாற்றம் மப்பேடு பகுதிவாசிகள் அவதி
/
குப்பை, கழிவுநீரால் துர்நாற்றம் மப்பேடு பகுதிவாசிகள் அவதி
குப்பை, கழிவுநீரால் துர்நாற்றம் மப்பேடு பகுதிவாசிகள் அவதி
குப்பை, கழிவுநீரால் துர்நாற்றம் மப்பேடு பகுதிவாசிகள் அவதி
ADDED : மே 14, 2024 10:58 PM

கடம்பத்துார்:தணடலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி, தனியார் தொழிற்சாலை பேருந்து, கனரக, இலகுர வாகனம் என தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு விவசாயம் மற்றும் மாடுகள் வளர்ப்பது, பால் சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடந்து வருகிறது.
இதனால், மாட்டு சாணத்தை கொட்டுவதற்கு, ஊராட்சியில் இடமில்லாததால், மப்பேடு - தண்டலம் நெடுஞ்சாலையோரம் குடியிருப்பு பகுதிகள் நிறைந்த பகுதியில் கொட்டி வருகின்றனர்.
இதேபோல் ஊராட்சியில் சேகரமாகும் குப்பை முறையாக அகற்றப்படாததால் நெடுஞ்சாலையின் ஒருபுறம் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
மேலும் கழிவுநீர் கால்வாய் முறையாக இல்லாததால் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நெடுஞ்சாலையோரம் குளம் போல் தேங்கி நின்று சாலையில் வழிந்தோடுகிறது.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தில் இந்த நெடுஞ்சாலை வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்படுவதோடு தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் மப்பேடு ஊராட்சியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

