/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்மாற்றியில் படரும் கொடி விபத்து அச்சத்தில் பகுதிவாசிகள்
/
மின்மாற்றியில் படரும் கொடி விபத்து அச்சத்தில் பகுதிவாசிகள்
மின்மாற்றியில் படரும் கொடி விபத்து அச்சத்தில் பகுதிவாசிகள்
மின்மாற்றியில் படரும் கொடி விபத்து அச்சத்தில் பகுதிவாசிகள்
ADDED : ஜூலை 15, 2024 11:00 PM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் கிராமத்தில் இருந்து வீரகோவில் மோட்டூர் வழியாக, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கருக்கு தார் சாலை வசதி உள்ளது.
இந்த வழியாக வீரமங்கலம், வீரமங்கலம் காலனி, காட்டூர், அம்மலேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களின் அத்தியாவசிய பணிகள் காரணமாக தினசரி சோளிங்கருக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பந்திகுப்பம் கூட்டு சாலை அருகே சாலையோரம் உள்ள மின்மாற்றியில் கொடிகள் படர்ந்து வருகின்றன. இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது.
இந்த வழியாக நடந்து செல்பவர்களும், அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்பவர்களும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
மின்மாற்றியில் படரும் கொடியை அகற்றி, சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல், பந்திகுப்பம் செல்லும் சாலையிலும் மின்கம்பத்தில் கொடி படர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.