/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் குழாய் சேதம் பகுதிவாசிகள் தவிப்பு
/
குடிநீர் குழாய் சேதம் பகுதிவாசிகள் தவிப்பு
ADDED : ஏப் 10, 2024 09:20 PM
ஊத்துக்கோட்டை:தச்சூர் முதல் ஆந்திர மாநிலம், சித்துார் வரை ஆறுவழிச் சாலை பணி தற்போது நடந்து வருகிறது.
புன்னப்பாக்கம், பாகல்மேடு கூட்டுச்சாலை, காதிர்வேடு, மாம்பள்ளம் ஆகிய பகுதிகளில் சாலைப் பணி நடந்து வருகிறது.
புன்னப்பாக்கம் பகுதியில் குடிநீர் ஏற்றும் அறை உள்ளது. இங்கிருந்து மாம்பள்ளம், காதிர்வேடு, வெங்கல் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குழாய் வாயிலாக குடிநீர் செல்கிறது.
இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, பள்ளம் தோண்டிய போது, குடிநீர் குழாய் சேதம் அடைந்தது. இதனால் மற்ற கிராமங்களுக்கு குடிநீர் செல்லும் வழி தடைபட்டது.
கடந்த, 4 நாட்களாக குடிநீர் செல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து, குழாய் சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

