/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வருவாய் துறை அதிகாரி டூ - வீலர் திருட்டு
/
வருவாய் துறை அதிகாரி டூ - வீலர் திருட்டு
ADDED : ஜூலை 31, 2024 02:59 AM
திருத்தணி:திருத்தணி தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கமல், 37. இவர், முருகன் கோவிலில் நடந்த ஆடிக்கிருத்திகை விழாவில் சிறப்பு பணியாக, மேல்திருத்தணி நல்லாங்குளம் பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு மேல்திருத்தணி நல்லாங்குளம் அருகே, தன் 'புல்லட்' இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நல்லாங்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின், நள்ளிரவு வந்து போது, மர்ம நபர்களால் இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து திருத்தணி டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். புகாரின் படி வழக்கு பதிந்த திருத்தணி போலீசார், அங்குள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.