/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாய பணிக்கு நெல் அறுவடை இயந்திரம்
/
விவசாய பணிக்கு நெல் அறுவடை இயந்திரம்
ADDED : செப் 09, 2024 06:54 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக, நெல் அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்து, குறைந்த வாடகையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தற்காலிக தீர்வாக, பிற மாவட்டங்களில் இருந்து மூன்று இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் இ- - -வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து இந்நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு மணி நேரத்திற்கு 1,880 ரூபாய் வீதம், வாடகைக்கு பெற்று பயனடையலாம். கூடுதல் தகவல் பெற, திருவள்ளூர் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.