/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
/
தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
தார்ப்பாய் போடாமல் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : ஆக 02, 2024 02:53 AM

பள்ளிப்பட்டு,:பள்ளிப்பட்டு அருகே ஆறு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து ஆந்திர மாநிலம் சித்துார் வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இந்த பணிநிறைவு பெறும் பட்சத்தில், எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு இந்த சாலை விரைவு சாலையாக அமையும்.
இந்த சாலை பணிக்காக, வடகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் குவாரியில் இருந்து மண் ஏற்றி செல்லப்படுகிறது.
இந்த மண் லாரிகள், வடகுப்பத்தில் இருந்து பள்ளிப்பட்டு, சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை வழியாக, ஆறுவழி சாலை பணி நடக்கும் பகுதிக்கு பயணிக்கின்றன.
இந்நிலையில், இந்த லாரிகளில் மண் லோடுகளுக்கு தார்ப்பாய் போட்டு மூடுவது இல்லை. இதனால், சாலையில் புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விபத்து நேரிடும் அபாயநிலை உள்ளது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, மண் ஏற்றி செல்லும் லாரிகளில் தார்ப்பாய் கொண்டு, மூடி செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதி வாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.