/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பு இல்லாத நெடுஞ்சாலை காரனோடையில் விபத்து அபாயம்
/
தடுப்பு இல்லாத நெடுஞ்சாலை காரனோடையில் விபத்து அபாயம்
தடுப்பு இல்லாத நெடுஞ்சாலை காரனோடையில் விபத்து அபாயம்
தடுப்பு இல்லாத நெடுஞ்சாலை காரனோடையில் விபத்து அபாயம்
ADDED : மே 23, 2024 12:18 AM

சோழவரம்:சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த காரனோடை பகுதியில் ஆற்று மேம்பாலம் அமைந்துள்ளது.
இதில், கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் வாகனங்கள் காரனோடை, சோழவரம் பகுதிகளுக்கு செல்ல பாலத்தின் இடதுபுறமும், சென்னை செல்லும் வாகனங்கள் வலதுபுற பாதையிலும் பயணிக்கின்றன.
இந்த நிலையில், காரனோடை பகுதியில் உள்ள இந்த இரு வழித்தடங்களுக்கும் இடையே தடுப்புகள் ஏதும் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், வழித்தடம் தவறும் வாகனங்கள் தடுப்புகள் இல்லாத பகுதி வழியாக பயணிக்க முயற்சிக்கின்றன.
இதில் சோழவரம், காரனோடை சாலையானது, 2 அடி தாழ்வாக இருக்கிறது. இரவு நேரங்களில் வழித்தடம் மாறும் வாகனங்கள், தடுப்பு இல்லாத பகுதி வழியாக கடக்க முயன்று தடுமாற்றம் அடைகின்றன.
இருசக்கர வாகனங்களும், திடீர் திடீரென இந்த பகுதியில் தடம் மாறி பயணிக்கின்றன. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக பயணிக்கும் மற்ற வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன. இதனால், விபத்துகள் நேரிடும் அபாயமும் உள்ளது.
இந்த பகுதியில் தேவையான தடுப்புகளை வைத்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

