/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருதரப்பினர் மோதலால் சாலை மறியல்
/
இருதரப்பினர் மோதலால் சாலை மறியல்
ADDED : ஏப் 24, 2024 01:16 AM

வாணியஞ்சத்திரம்:எல்லாபுரம் மத்திய ஒன்றிய தி.மு.க., செயலர் தங்கம்முரளி. இவரது சகோதரர் வேலு. இவரது நண்பர்கள் வெங்கடேசன், சிவா. அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அ.தி.மு.க., ஆதரவாளர்.
இவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து பாலகிருஷ்ணன், வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சித்ரா பவுர்ணமி நாளை ஒட்டி போலீசார் திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
போலீஸ் பற்றாக்குறையால் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனது.
நேற்று தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி மகன் வித்யாதர், வேலு மற்றும் பலர், பாலகிருஷ்ணன் அவரது ஆதரவாளர்கள் ராமச்சந்திரன், வினோத் ஆகியோரை தாக்கினர்.
இதில் ராமச்சந்திரன், வினாத் ஆகியோர் கத்திக்குத்தால் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாணியஞ்சத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெங்கல் எஸ்.ஐ., மாலா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். பின் அவர்கள் கலைந்து சென்றனர்.
புகார் குறித்து நடவடிக்கை எடுத்து இருந்தால், கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்து இருக்காது என ஆவேசமாக கூறினர். இதனால் தாமரைப்பாக்கம் - செங்குன்றம் இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

