/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சவுடு மண் லாரிகளை கண்டித்து திருப்பாச்சூரில் சாலை மறியல்
/
சவுடு மண் லாரிகளை கண்டித்து திருப்பாச்சூரில் சாலை மறியல்
சவுடு மண் லாரிகளை கண்டித்து திருப்பாச்சூரில் சாலை மறியல்
சவுடு மண் லாரிகளை கண்டித்து திருப்பாச்சூரில் சாலை மறியல்
ADDED : ஆக 25, 2024 02:00 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் வழியாக, சவுடு மண் எடுக்க வரும் லாரிகளை கண்டித்து, கிராமவாசிகள் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதித்தது.
திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் ஏரியில் சவுடு மண் குவாரி, கடந்த, 22ம் தேதி துவங்கியது. இந்த குவாரிக்கு திருப்பாச்சூர், குப்பம்மாள் சத்திரம் வழியாக லாரிகள்மண் எடுக்க சென்று கொண்டிருந்தன.
அன்றைய தினம், திருப்பாச்சூர் கோட்டை காலனியை சேர்ந்த கருணாகரன் மனைவி வள்ளியம்மாள், 55. நுாறு நாள் வேலை முடிந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, கைவண்டூர்ஏரியில் சவுடு மண் எடுப்பதற்காக வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில், பலத்த காயமடைந்த வள்ளியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து நடந்ததால், ஒரு நாள் மட்டும் இயங்காத சவுடு மண் குவாரி நேற்று மீண்டும் இயங்கியது. இதற்காக, சவுடு மண் எடுக்க, நேற்று, 100க்கும் மேற்பட்ட லாரிகள் திருப்பாச்சூர் வழியாக வேகமாக சென்றது.
இதைக் கண்ட அப்பகுதிவாசிகள், லாரிகளை மறித்து, திருவள்ளூர் - கடம்பத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மணல் எடுக்க வந்த டிப்பர் லாரிகள் சாலையோரம் நீண்ட தொலைவிற்கு ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டோரிடம் சமாதான பேச்சு நடத்தினர். இதை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக திருவள்ளூர் - கடம்பத்துார் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.