/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்
/
பொன்னேரியில் மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்
ADDED : ஜூன் 14, 2024 01:13 AM

பொன்னேரி:பொன்னேரியில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது.
குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தினமும் குடியிருப்புவாசிகள் இதை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சின்னகாவனம் திருவாயர்பாடி பகுதிகளில் காலை முதல் மின்சாரம் இல்லாததால் குடியிருப்பு வாசிகள் கொதிப்படைந்தனர்.
நேற்று இரவு, 7:00மணிக்கு பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசையும், செயல்படாத மின்வாரியத்தையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தால் பலவேற்காடு சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதிய தேரடி சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே வரிசையில் நின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொன்னேரி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
பொன்னேரி தாசில்தார் மதிவாணன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மறியலில் ஈடுபட்டவர்கள், மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் தரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.