/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார் ஒன்றியத்தில் கிடப்பில் சாலை சீரமைப்பு பணி
/
கடம்பத்துார் ஒன்றியத்தில் கிடப்பில் சாலை சீரமைப்பு பணி
கடம்பத்துார் ஒன்றியத்தில் கிடப்பில் சாலை சீரமைப்பு பணி
கடம்பத்துார் ஒன்றியத்தில் கிடப்பில் சாலை சீரமைப்பு பணி
ADDED : மே 07, 2024 11:58 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் முதுகூர் ஊராட்சி பகுதியில் உள்ள ஒன்றிய சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இப்பகுதியில் உள்ள 5.5 கி.மீ., துாரமுள்ள நெடுஞ்சாலை கடந்த சில மாதங்களாக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் கடந்த நான்கு மாதங்களாக ஜல்லி கற்கள் போடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் முதுகூர் மற்றும் கொட்டையூர் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் அவதி
l திருவாலங்காடு ரயில் நிலைய சாலைவழியே, தார்ப்பாய் கொண்டு மூடாமலும், பதிவெண் இன்றியும் செல்லும் சவுடு மண் லாரிகளால், வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் சில மாதங்களுக்கு முன், அரசு உத்தரவுப்படி சவுடு மண் எடுக்கும் பணி துவங்கியது.
தற்போது தக்கோலம், காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சவுடு மண் செல்ல திருவாலங்காடு ரயில்வே கேட் சாலை வழியாக சென்று வருகின்றன.
சவுடு மண் எடுத்துச் செல்லும் லாரிகள் பதிவெண் இன்றியும் அதிவேகமாகவும், தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்வதால், மண் துகள் சிதறி இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரின் கண்களில் விழுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் பதிவெண் இன்றியும், தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

