/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரு நாள் மழைக்கே ஆட்டம் காணும் சாலை தடுப்புகள்
/
ஒரு நாள் மழைக்கே ஆட்டம் காணும் சாலை தடுப்புகள்
ADDED : ஜூன் 13, 2024 12:52 AM

பள்ளிப்பட்டு:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், நாதன்குளம் பகுதியில் ஆபத்தான சாலை வளைவு உள்ளது. இந்த பகுதியில் அதிகளவில் விபத்துகள் நடந்து வந்தன.
இதனால், சமீபத்தில் சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதற்காக, சாலையை ஒட்டிய பகுதியில் இருந்து மண் வெட்டி எடுக்கப்பட்டு, சாலையோரம் சமதளமாக மாற்றப்பட்டு, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் கோடை மழைக்கு, இரும்பு தடுப்புகள் நடுவதற்காக சமன் செய்யப்பட்ட இடத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், எங்கிருந்து மண் வெட்டி எடுக்கப்பட்டதோ, அதே பகுதிக்கே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, சாலையோர தடுப்புகள் வலுவிழந்து உள்ளன.
எனவே, பருவமழைக்கு இந்த தடுப்புகள் தாக்கு பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைதுள்ளனர்.