/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோதனைச்சாவடியற்ற சாலைகள் ரோந்து போலீசார் கண்காணிப்பு
/
சோதனைச்சாவடியற்ற சாலைகள் ரோந்து போலீசார் கண்காணிப்பு
சோதனைச்சாவடியற்ற சாலைகள் ரோந்து போலீசார் கண்காணிப்பு
சோதனைச்சாவடியற்ற சாலைகள் ரோந்து போலீசார் கண்காணிப்பு
ADDED : மார் 26, 2024 11:02 PM
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியை, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சீனிவாச பெருமாள் நேற்று ஆய்வு செய்தார்.
போலீசார் மேற்கொண்டு வரும் வாகன சோதனை, கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள், வாகன பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
இதுகுறித்து எஸ்.பி., கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில எல்லையோரம், ஐந்து நிரந்தர மற்றும் ஐந்து தற்காலிக சோதனைச்சாவடிகள் உள்ளன.
தேர்தலை முன்னிட்டு அனைத்து சோதனைச்சாவடிகளிலும், ஒரு எஸ்.ஐ., தலைமையில் ஐந்து போலீசார் கொண்ட குழுவினர், தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதவிர சோதனைச்சாவடி இல்லாத மாநில எல்லையோர சாலைகளில், ரோந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.