/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் கழிவு குவிப்பு துராபள்ளத்தில் சுகாதாரம் பாதிப்பு
/
சாலையோரம் கழிவு குவிப்பு துராபள்ளத்தில் சுகாதாரம் பாதிப்பு
சாலையோரம் கழிவு குவிப்பு துராபள்ளத்தில் சுகாதாரம் பாதிப்பு
சாலையோரம் கழிவு குவிப்பு துராபள்ளத்தில் சுகாதாரம் பாதிப்பு
ADDED : பிப் 24, 2025 01:47 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, பெரியஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது துராப்பள்ளம் கிராமம். அங்கு, சுண்ணாம்புகுளம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையோரம், துராபள்ளம் கிராமத்தினருக்கான சுடுகாடு உள்ளது.
பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், வீராசாமி நகர் பகுதியில் உள்ள கடைவீதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் இறைச்சி கழிவை அந்த சுடுகாட்டை ஒட்டிய சாலையோரம் குவித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமும் பாதிக்கிறது. அந்த பகுதியில், இரு தனியார் பள்ளிகள் இயங்கி வருவதால், மாணவர்களின் சுகாதாரமும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.
துராபள்ளம் கிராம பகுதியில் சேகரமாகும் கழிவை, முறையாக அப்புறப்படுத்தி கிராமத்தினரின் சுகாதாரத்தை காக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.