/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெயிலில் மீன்களை பாதுகாக்க படகுகளில் கூரை
/
வெயிலில் மீன்களை பாதுகாக்க படகுகளில் கூரை
ADDED : மார் 04, 2025 01:03 AM

பழவேற்காடு, பழவேற்காடு மீனவப்பகுதியில் கடல் மற்றும் ஏரியில் மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று மீன் பிடிக்கின்றனர். மீனவ கிராமங்களில், 1,600க்கும் அதிகமான பைபர் படகுகள் உள்ளன.
மீனவர்கள் நள்ளிரவு கடலில் மீன்பிடி தொழிலுக்கு சென்று, காலையில் கரை திரும்புகின்றனர். சில மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலில் தங்கி தொழில் செய்கின்றனர்.
மீன்களை பதப்படுத்துவற்கு தேவையான ஐஸ் பெட்டிகள் படகுகளில் உள்ளன. ஆனால், இந்நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, பெட்டிகளில் உள்ள ஐஸ் வேகமாக உருகிவிடுவதால், மீன்களை பாதுகாப்பதில் சிரமம் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து, தற்போது மீனவர்கள் தங்களது படகுகளில் சிறிய அளவில் கூரை அமைத்து, ஐஸ் பெட்டிகளை வெயிலில் இருந்து பாதுகாத்து வருகின்றனர்.
இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:
கோடை காலத்தில் மீன்களை பதப்படுத்தி வைப்பதில் சிரமம் இருக்கிறது. பகல் நேரங்களில் தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதை சமாளிக்கவே, படகுகளில் இதுபோன்ற கூரைகளை அமைக்கிறோம். எளிதில் ஐஸ் கட்டிகள் உருகாத வகையிலும், வெயில் பாதிப்பு தாங்கும் திறனுடனும் பெட்டிகள் வழங்க மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.