/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓராண்டு நிறைவடைந்த ரோப்கார் சேவை
/
ஓராண்டு நிறைவடைந்த ரோப்கார் சேவை
ADDED : மார் 09, 2025 03:03 AM

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது, அமிர்தவல்லி தாயார் உடனுறை யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இக்கோவிலின் எதிரே சின்னமலையில், யோக அனுமன் அருள்பாலித்து வருகிறார்.
யோக நரசிம்ம சுவாமி அருள்பாலிக்கும் பெரியமலைக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை அமைந்துள்ளது. கடந்தாண்டு மார்ச் 8ம் தேதி பக்தர்களின் பங்களிப்புடன், இங்கு ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஒருவருக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் ரோப்கார் வாயிலாக பயணித்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது.
ரோப்கார் சேவை நேற்று முதலாமாண் டை நிறைவு செய்தது. கடந்த ஓராண்டில், 2.75 லட்சம் பக்தர்கள், ரோப்கார் வாயிலாக மலைக்கோவிலுக்கு பயணித்துள்ளனர். சோளிங்கர் பெருமாள் கோவிலில் இன்று முதல் நாளை மறுதினம் வரை தவணோற்சவம் நடைபெற உள்ளது.