/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லுாரில் சேதமான நெற்களம் 6 மாதத்தில் ரூ.7.21 லட்சம் 'அம்போ'
/
புட்லுாரில் சேதமான நெற்களம் 6 மாதத்தில் ரூ.7.21 லட்சம் 'அம்போ'
புட்லுாரில் சேதமான நெற்களம் 6 மாதத்தில் ரூ.7.21 லட்சம் 'அம்போ'
புட்லுாரில் சேதமான நெற்களம் 6 மாதத்தில் ரூ.7.21 லட்சம் 'அம்போ'
ADDED : செப் 17, 2024 05:56 AM

திருவள்ளூர்: புட்லுாரில் நெற்களம் அமைத்து, ஆறு மாதத்திலேயே சேதமடைந்து விட்டதால், அரசு பணம் 7.21 லட்சம் ரூபாய் வீணாகி விட்டது.
திருவள்ளூர் ஒன்றியம், புட்லுாரில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் விவசாயம் நடக்கிறது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை, ஆற வைப்பதற்காக, கடந்த ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2ன் கீழ், 7.21 லட்சம் ரூபாய் மதிப்பில் நெற்களம் அமைக்கப்பட்டது.
நெற்களம் அமைத்த ஆறு மாதத்திற்குள் நெல் மணிகளை ஏற்றி வந்த டிராக்டர் பாரம் தாங்காமல், சேதமடைந்து விட்டது. அவசரம், அவரசமாக மீண்டும் அதை ஒப்பந்ததாரர் பழுது நீக்கினார்.
இருப்பினும், அரைகுறையாக அமைக்கப்பட்ட நெற்களம், பழுது நீக்கியும், அதன் உறுதித்தன்மை குறைந்து விட்டது. இதனால், நெற்களத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் தளம் சேதமடைந்து, குண்டும், குழியுமாக மாறிவிட்டது.
இதனால், நெற்களத்திற்குள் நெல் மணிகளை ஏற்றி வரும் வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புட்லுார் விவசாயிகள் கூறுகையில், '7.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நெற்களம் ஆறு மாதம் கூட தாங்காத அளவிற்கு அரைகுறையாக அமைக்கப்பட்டு உள்ளது.
அரைகுறை பணியால், விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், அரசு பணம் தான் வீணாகி விட்டது.
எனவே, மாவட்ட கலெக்டர் இந்த நெற்களத்தை நேரடியாக பார்வையிட்டு, விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் தரமான நெற்களமாக மாற்றித் தரவேண்டும்' என்றனர்.