/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோனேட்டம்பேட்டையில் பாழாகும் கோவில் குளம்
/
கோனேட்டம்பேட்டையில் பாழாகும் கோவில் குளம்
ADDED : செப் 02, 2024 11:10 PM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், கோனேட்டம்பேட்டையில் நகரி செல்லும் சாலையை ஒட்டி, பழமையான அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலின் உட்பிரகாரத்தில், கலைநயம் மிக்க புடைப்பு சிற்பங்கள் அமைந்துள்ளன. கோவிலின் தென்கிழக்கில் குளம் ஒன்றும் உள்ளது. பழமையான இந்த குளத்தின் அமைப்பு முற்றிலும் வித்தியாசமான அமைப்பில் உள்ளது.
குளத்தின் வடக்கு படித்துறை வழியாக குதிரைகள் இறங்கி வந்து தண்ணீர் குடிக்கும் விதமாக, நீண்ட சாய்தளமாக அமைக்கப்பட்டிருக்கும்.
பள்ளிப்பட்டு அடுத்த கார்வேட் நகர ராஜாக்கள் ஆட்சிக்காலத்தில் இந்த குளம், குதிரைபடைகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கலாம் என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். வித்தியாசமான இந்த குளம் தற்போது பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. குளத்திற்கு நீர்வரத்தும் தடை பட்டுள்ளது. படிகள் சீரழிந்து சரிந்து வருகின்றன. புராதன சிறப்பு மிக்க இந்த குளத்தை பராமரிக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.