/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னையில் துவங்கியது பாய்மரப்படகு போட்டி
/
சென்னையில் துவங்கியது பாய்மரப்படகு போட்டி
ADDED : மே 01, 2024 10:13 PM
சென்னை:சென்னையில், 'யுனிபை கேபிடல்' அமைப்பு சார்பில், பாய்மரப்படகு போட்டி நேற்று துவங்கியது. வரும் 5ம் தேதி வரை நடக்கிறது.
சென்னை துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை சென்று திரும்பும் வகையிலும், காமராஜ் துறைமுகத்தில் இருந்து சென்னை துறைமுகம் வரை சென்று திரும்பும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதை, தமிழக விளையாட்டு துறை செயலர் மேகநாத ரெட்டி, இந்திய கடல்சார் பல்கலை துணைவேந்தர் மாலினி சங்கர் ஆகியோர், கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில், ஜெ - 80 ரகத்தைச் சேர்ந்த நான்கு பாய்மரப் படகுகளில், 5 மணி நேரம், 50 கி.மீ., துாரத்துக்கு கடல்வழி பயணம் செய்யும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், கமான்டர் அபிலாஷ் டோமி, முருகன் நாடார், சின்ன ரெட்டி, அயாஸ் ஷேக், ஏ.என்.சுவாமி உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
துவக்க நாள் நிகழ்ச்சியில், இந்திய ராணுவம், கடற்படை, கடலோரக் காவல்படை, விளையாட்டு அமைச்சகம், சென்னை துறைமுகம் மற்றும் இந்திய படகு சங்கம் ஆகியவற்றின் தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

