/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனல் மின் நிலையத்திற்கான கிராவல் மண் வெளிநபருக்கு விற்பனை: கலெக்டரிடம் புகார் கிராவல் மண் விற்பனையில் முறைகேடு கண்டுகொள்ளாத கனிமவள துறையால் மக்கள் கொதிப்பு

ADDED : மே 30, 2024 12:22 AM
திருவள்ளூர்:எண்ணுார் அனல் மின் நிலையத்திற்கு கிராவல் மண் வழங்க பெறப்பட்ட அனுமதியை முறைகேடாக வெளியிடங்களுக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி தாலுகா, பல்லவாடா கிராம மக்கள் சார்பில், வழக்கறிஞர் ஜெகன்குமார் திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள புகார் மனு:
திருவள்ளூர் மாவட்டம், பல்லவாடா கிராமத்தில், அரசுக்கு சொந்தமான இடத்தில், எண்ணுார் அனல் மின் நிலையத்திற்கு கிராவல் மண் எடுத்துச் செல்ல கனிமவள துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
இதை முறைகேடாக பயன்படுத்தி, தினமும், 500க்கும் மேற்பட்ட லாரிகளில், கிராவல் மண் வெளியிடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இந்த இடத்திற்கு அருகில், ஏழை எளியோருக்கு தமிழக அரசு வழங்கிய 2 ஏக்கர் நிலத்திலும், கிராவல் மண் எடுக்கப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட கிராம மக்களை, கிராவல் மண் எடுப்போர் மிரட்டி வருகின்றனர்.
கடந்த, 20 நாட்களாக இந்த முறைகேடு நடந்து வருகிறது. இதுகுறித்து, கனிமவள துறையிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சட்டவிரோதமாக நடைபெறும் கிராவல் மண் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து, அரசுக்கு இழப்பீடு செய்தோருக்கு அபராதம் விதித்து, கனிமவளத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.