/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு தோட்டக்கலை பண்ணையில் கத்திரி, மிளகாய் நாற்றுகள் விற்பனை
/
அரசு தோட்டக்கலை பண்ணையில் கத்திரி, மிளகாய் நாற்றுகள் விற்பனை
அரசு தோட்டக்கலை பண்ணையில் கத்திரி, மிளகாய் நாற்றுகள் விற்பனை
அரசு தோட்டக்கலை பண்ணையில் கத்திரி, மிளகாய் நாற்றுகள் விற்பனை
ADDED : செப் 11, 2024 01:16 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை, அரசு தோட்டக்கலை பண்ணையில், கத்திரி, மிளகாய், பூச் செடி மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில், கடந்த, 2020ல் ஈக்காடு வட்டம் ஈக்காடு கண்டிகையில், அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்பட்டது. மொத்தம், 5.32 ஏக்கர் பரப்பளவில், அமைந்துள்ள இந்த பண்ணையில், மிளகாய், கத்திரி குழித்தட்டு நாற்றுகள்; சீத்தா, எழுமிச்சை போன்ற பழச்செடிகள்; பூச் செடிகள், மருத்துவம் மற்றும் அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவற்றை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தோட்டகலை துறை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், அரசு மானியத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு நேரடியாகவும் செடி நாற்று விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி கூறியதாவது:
அரசு தோட்டக்கலை பண்ணையில், உற்பத்தி செய்யப்படும் செடி நாற்றுகள் விவசாயிகள், பொதுமக்களுக்கு மானியத்திலும், தனியாகவும் விற்பனை செய்யப்படுகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி நடத்துவோர், மரக்கன்று நடுவோரும் இங்கு வந்து செடி நாற்றுகளை வாங்கிச் செல்கின்றனர். பழவகைகளில், சீத்தா, எலுமிச்சை, வீட்டு அலங்காரத்திற்கு மணி பிளான்ட், ஸ்பைடர் லில்லி, அரேலியா; திப்பிலி, நாவல், வேம்பு, மல்லிகை, செம்பருத்தி, வல்லாரை போன்ற அனைத்து நாற்றுகளும் தலா 15 ரூபாய்க்கு கிடைக்கும்.
இதுவரை, 3,24,987 குழித்தட்டு கத்திரி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. 91,663 நாற்றுகள் வரும் அக்., இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது.
தற்போது, பாரம்பரிய ரகமான 1,24,995 கத்திரி நாற்றுகள், வினியோகத்திற்கு தயாரக உள்ளது. மேலும், மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், 4,16,650 மற்றும் பாரம்பரிய நாட்டு மிளகாய், 83,330 நாற்றுகள் கார்த்திகை பட்டத்திற்கு வழங்கப்பட உள்ளது.
செடிகள் மற்றும் நாற்றுகள் தேவைப்படுவோர், தோட்டக்கலை அலுவலர்களான, கிஷோஷர்குமார்-86108 87350, மலர்மன்னன்-96268 72288 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.