/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணல் லாரி மோதி வாலிபர் பலி உறவினர்கள் மறியல் போராட்டம்
/
மணல் லாரி மோதி வாலிபர் பலி உறவினர்கள் மறியல் போராட்டம்
மணல் லாரி மோதி வாலிபர் பலி உறவினர்கள் மறியல் போராட்டம்
மணல் லாரி மோதி வாலிபர் பலி உறவினர்கள் மறியல் போராட்டம்
ADDED : செப் 04, 2024 02:31 AM

திருவள்ளூர்:திருவள்ளுர் அடுத்த சிட்டதுார் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வினோத்குமார், 35. அம்பத்துார் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வரும் வினோத்குமார், தினமும் வீட்டிலிருந்து செவ்வாய்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து, பின் புறநகர் மின்சார ரயில் மூலம் பணிக்கு செல்வார்.
நேற்று காலை இருசக்கர வாகனத்தில் செவ்வாப்பேட்டை - கீழானுார் செல்லும் சாலையில், தண்ணீர்குளம் அடுத்த தண்டலம் பகுதியில் பின்னால் வந்த சவுடு மணல் லாரி மோதியதில், இரு சக்கரவாகனத்தில் சென்ற வினோத்குமார் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தை பார்த்த தண்டலம் கிராம பகுதிவாசிகள் லாரியை பிடித்தபோது லாரி ஓட்டுனர் தப்பியோடினார்.
தகவலறிந்த வினோத்குமாரின் உறவினர்கள், உயிரிழப்புக்கு உரிய பதில் கிடைக்கும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என, கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வினோத்குமாரின் மனைவி அனிதா கர்ப்பமாக உள்ளார்.
தகவலறிந்த பூந்தமல்லி உதவி ஆணையர் ரவிக்குமார், செவ்வாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன், திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் அன்புசெல்வி மற்றும் அதிகாரிகள் சமாதான பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.