/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கருவேல மரங்களால் சீரழியும் சானுார் மல்லாவரம் குளம்
/
கருவேல மரங்களால் சீரழியும் சானுார் மல்லாவரம் குளம்
கருவேல மரங்களால் சீரழியும் சானுார் மல்லாவரம் குளம்
கருவேல மரங்களால் சீரழியும் சானுார் மல்லாவரம் குளம்
ADDED : ஜூன் 11, 2024 03:58 PM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சாணுர் மல்லாவரம் கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தினர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
கிராமத்தின் கிழக்கில் செந்தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தின் அடிப்பகுதி பாறையாக அமைந்துள்ளதால், ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் குளத்திற்கு கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து தொடர் பராமரிப்பு இல்லாததால் நீர்வரத்து கால்வாய்கள் சீரழிந்து உள்ளன.
இதனால் குளத்தின் நீர் வரத்து தடைபட்டுள்ளது. செந்தாமரை மலர்களால் அழகாக காணப்பட்ட குளம், தற்போது கருவேல மரங்களால் சீரழிந்து வருகிறது.
குளத்திற்கு நீர் வரத்து இருந்திருந்தால், கருவேல மரங்கள் முளைத்திருக்க வாய்ப்பு இல்லை .குளத்தின் நீர் வரத்து கால்வாய்களை சீரமைத்து குளத்தை மேம்படுத்த வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.