/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வருவாய் இல்லாமல் தவிக்கும் பள்ளிப்பட்டு நெசவாளர்கள்
/
வருவாய் இல்லாமல் தவிக்கும் பள்ளிப்பட்டு நெசவாளர்கள்
வருவாய் இல்லாமல் தவிக்கும் பள்ளிப்பட்டு நெசவாளர்கள்
வருவாய் இல்லாமல் தவிக்கும் பள்ளிப்பட்டு நெசவாளர்கள்
ADDED : செப் 10, 2024 06:24 AM
ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு சங்கம் வாயிலாக நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறிகளுக்கு கூட்டுறவு சங்கம் வாயிலாக வழங்கப்படும் நுால் கட்டுகளை கொண்டு நெசவாளர்கள், வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை நெசவு செய்து வருகின்றனர்.
இந்த வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி,சேலை திட்டத்தின் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான ஊடை நுால் வழங்கப்படவில்லை.
அதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் உற்பத்திக்கான ஆணை பிறப்பிக்கப்படவில்லை. இதனால், நெசவாளர்கள் தொழில் வாய்ப்பு இன்றி வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தொய்வு இன்றி தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.