/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உயர்கல்விக்கு விண்ணப்பிக்க சான்று பெற அலைக்கழிப்பு: வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., கட்டாயத்தால் தாமதம்
/
உயர்கல்விக்கு விண்ணப்பிக்க சான்று பெற அலைக்கழிப்பு: வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., கட்டாயத்தால் தாமதம்
உயர்கல்விக்கு விண்ணப்பிக்க சான்று பெற அலைக்கழிப்பு: வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., கட்டாயத்தால் தாமதம்
உயர்கல்விக்கு விண்ணப்பிக்க சான்று பெற அலைக்கழிப்பு: வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., கட்டாயத்தால் தாமதம்
ADDED : மே 10, 2024 09:08 PM
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
மருத்துவம், பொறியியல் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுக்கு தேைவயான சான்றுகளை வருவாய்த் துறையில் பெறுவதற்கு 'இ - சேவை' மையத்தை நாடுகின்றனர். மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு முதல் பட்டதாரி சான்று, வருமான சான்று, சாதிசான்று, ஓ.பி.சி., சான்று, இருப்பிட சான்று தேவைப்படுகிறது.
பிற சான்றுகள் பெறுவதற்கு ஆவணங்களாக குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவை இணைக்கப்படுகிறது.
ஓ.பி.சி., சான்று பெறுவதற்கு வருமான சான்று இணைக்கப்பட வேண்டியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 72,000 ஆயிரத்திற்கும் குறைவான வருமான சான்று வருவாய்த் துறையால் வழங்கப்படுகிறது. இதை பிற ஆவணங்களோடு இணைக்கின்றனர்.
மாணவர்களின் பெற்றோர் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என்றால், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் வழங்கும் சம்பள 'சிலிப்' அல்லது நிறுவனம் அளிக்கும் வருமான சான்று இணைக்கப்படுகிறது.
இந்நிலையில் வி.ஏ.ஓ, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், தனியார் நிறுவனம் அளிக்கும் வருமான சான்று மற்றும் சம்பள சிலிப் வைத்து, வருவாய்த்துறையிடம் வருமான சான்று பெற வேண்டுமென, கட்டாயப்படுத்துகின்றனர்.
இது மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேவையற்ற மனஉைளச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் உரிய நேரத்தில் சான்று கிடைக்காமல் காலதாமதம் ஏற்படுகிறது.
ஓ.பி.சி., சான்று கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருமான சான்று இணைக்கப்பட வேண்டுமென திருப்பி அனுப்பப்படுகிறது. இதை தாசில்தார் லெவலில் உள்ள அதிகாரிகள், வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., யிடம் தெளிவுபடுத்த வேண்டும். தனியார் நிறுவனம் அளிக்கும் வருமான சான்று போதுமானது என அறிவுறுத்த வேண்டும்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய மூன்று தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மேற்கண்ட சான்றுகள் குறித்த நேரத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிற தாலுகாக்களிலும் இதே நிலை நீடிக்கிறது.
எனவே கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி வருவாய் கோட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை தாசில்தார்கள் மற்றும் தாசில்தார்களுக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்கும் சான்றுகள் ஏழு நாட்களுக்குள் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் வராத அளவில் சான்று வழங்க வேண்டும் என அறிவுறுத்தி வாட்ஸாப் வாயிலாக தகவல் அனுப்பியுள்ளார்.
-நமதுநிருபர்-