/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு ‛'சீல்'
/
ஓட்டுப்பதிவு இயந்திர அறைக்கு ‛'சீல்'
ADDED : மார் 25, 2024 06:25 AM

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அவற்றுக்கு தேவையான, 396 ஓட்டு பதிவு இயந்திரங்கள், 429 விவி பேட் கருவிகள், நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு லாரிகளில் வந்தன.
அவை போலீஸ் பாதுகாப்புடன், 'ஸ்ட்ராங் ரூம்' ல் இறக்கி வைக்கப்பட்டன. பின் துணை தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் மேற்பார்வையில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், ஓட்டு பதிவு இயந்திரங்களின் சீரியல் எண்கள் சரி பார்க்கப்பட்டன.
அனைத்தும் சரி பார்த்த பின், கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், ஸ்ட்ராங் ரூமிற்கு 'சீல்' வைக்கப்பட்டது. அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

