/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணுார் துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை
/
எண்ணுார் துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : செப் 05, 2024 08:25 PM
மீஞ்சூர்:கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கடலோர பாதுகாப்பு படை சார்பில், 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடந்த, இரண்டு தினங்களாக பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடலோர பகுதிகளில் இந்த ஒத்திகை நடந்தது. இதில், 'ரெட் போர்ஸ்' எனப்படும் காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள், தீவிரவாதிகள் போல் கடல் வழியாக ஊடுவருவது போன்றும், அவர்களை 'புளூ போர்ஸ்' எனப்படும் கடலோரா காவல் படை மற்றும், உள்ளூர் போலீசார் சுற்றிவளைத்து பிடிப்பதும் போன்று ஒத்திகை நடைபெற்றது.
நேற்று காலை, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பலை, 'ரெட்போர்ஸ்' குழு சிறைபிடிப்பது போன்றும், அதை கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ஏ.டி.ஜி.பி., சஞ்சய்குமார் தலைமையிலான, 'புளூ போர்ஸ்' குழு முறியடிப்பது போன்றும் நிகழ்ச்சி நடந்தது.
அதேபோன்று, காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில், படகு வாயிலாக நுழைய முயன்ற 'ரெட்போர்ஸ்' குழுவை சேர்ந்த ஆறுபேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து, டம்பி துப்பாக்கி, கத்தி, டம்மி வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இரண்டு நாட்கள் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை முடிந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.