ADDED : பிப் 14, 2025 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த, மேல்முதலம்பேடு கிராமத்தில் வசித்தவர் பாளையம், 56; தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, கவரைப்பேட்டை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.