/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோவில்களில் பாதுகாப்பு பணி முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு
/
கோவில்களில் பாதுகாப்பு பணி முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு
கோவில்களில் பாதுகாப்பு பணி முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு
கோவில்களில் பாதுகாப்பு பணி முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு
ADDED : ஜூலை 03, 2024 09:27 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் காலியாக உள்ள பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், சிறுவாபுரி முருகன் கோவில் உட்பட, அறநிலையத்துறை பராமரிப்பில், 100க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் காலியாக உள்ள சிறப்பு காவலர் பணியிடங்கள், முன்னாள் படைவீரர்கள் கொண்டு நிரப்பப்பட உள்ளன.
இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் 7,600 ரூபாய் வழங்கப்படும்.
எனவே, உடல் தகுதியும் விருப்பமும் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.