ADDED : ஆக 12, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக மணல் கடத்தி வருவதாக திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீசார் பொன்பாடி சோதனைச் சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பர் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சி செய்தபோது, லாரி டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.
சோதனை செய்தபோது ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.