/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செங்காளம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு
/
செங்காளம்மன் கோவில் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : மே 20, 2024 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால், 70. இவர் இங்கிருந்து கல்யாணகுப்பம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான செங்காளம்மன் கோவிலில் பூஜை செய்து வருகிறார்.
கடந்த 18ம் தேதி பூஜை செய்து, இரவு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். மறுநாள் 19ம் தேதி காலை பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அம்மன் கழுத்தில் கிடந்த 4 கிராம் தங்க தாலி செயின் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் படி புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

