/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காலி மனையில் கழிவுநீர் திருமழிசையில் அவதி
/
காலி மனையில் கழிவுநீர் திருமழிசையில் அவதி
ADDED : ஜூலை 20, 2024 06:17 AM

திருமழிசை; திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட நான்கு, ஐந்தாவது வார்டுகளில் ஏ.எஸ்.ஆர்.சிட்டி, ஏ.ஆர்.கே.விக்னேஷ்வர் நகர் என ஐந்துக்கும் மேற்பட்ட நகர்களில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்உள்ளன.
இப்பகுதியில் நான்காவது வார்டில் காவல்சேரி செல்லும் சாலையில் கழிவுநீர் சீரமைக்கப்படாமல் உள்ளது. ஐந்தாவது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக இல்லை.
இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் காலி மனைகளில் குளம் போல் தேங்கிநிற்கிறது.
மேலும் காலிமனைகளில் குப்பையும் மலை போல் குவிந்து வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சி பகுதியில் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.