/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கழிவுநீர் கலந்த கழிவுபொருட்கள்
/
ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கழிவுநீர் கலந்த கழிவுபொருட்கள்
ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கழிவுநீர் கலந்த கழிவுபொருட்கள்
ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கழிவுநீர் கலந்த கழிவுபொருட்கள்
ADDED : ஜூன் 13, 2024 04:48 PM

திருவள்ளூர்:திருமழிசை - - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, திருமழிசை பேரூராட்சி.
இங்குள்ள நெடுஞ்சாலையில் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து, கனரக வாகனம் என தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் பழைய பொருட்கள் கடையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், இரும்பு போன்ற கழிவு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலையோரம் கிடக்கும் கழிவு பொருட்களில் கால்நடைகள் இரை தேடுகின்றன.
இந்த கழிவு பொருட்களால் ஏற்படும் துர்நாற்றத்தில் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.