/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்
/
நெடுஞ்சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்
நெடுஞ்சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்
நெடுஞ்சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்
ADDED : மார் 01, 2025 12:22 AM

கும்மிடிப்பூண்டி, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லை முடிந்து, தமிழக எல்லை துவங்கும் இடத்தில் ஆரம்பாக்கம் பகுதி உள்ளது. தமிழக எல்லை துவங்கும் இடத்தில், போலீசாரின் சோதனைச்சாவடி உள்ளது.
அதன் அருகே, சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
ஆட்டோ ஸ்டாண்ட் போல, தேசிய நெடுஞ்சாலை மாறியதால், தமிழக எல்லை துவங்கும் இடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
ஆரம்பாக்கம் பஜார் பகுதியை நடைபாதை கடைகள் ஆக்கிரமித்ததால், தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை கருதி, ஷேர் ஆட்டோக்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்கி, ஆரம்பாக்கம் போலீசார் முறைப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.