/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழையனுாரில் தங்குமிடமான நெல் தரம் பிரிக்கும் கூடம்
/
பழையனுாரில் தங்குமிடமான நெல் தரம் பிரிக்கும் கூடம்
பழையனுாரில் தங்குமிடமான நெல் தரம் பிரிக்கும் கூடம்
பழையனுாரில் தங்குமிடமான நெல் தரம் பிரிக்கும் கூடம்
ADDED : செப் 10, 2024 06:27 AM

திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் ஊராட்சியில் கிராம சேவை மையத்தின் பின்புறம் அமைந்துள்ளது நெல் தரம் பிரிக்கும் கூடம்.
அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பில் நெற்களத்துடன் கூடிய நெல் தரம் பிரிக்கும் கூடம் கடந்தாண்டு கட்டப்பட்டது.
இக்கூடம் பயன்பாட்டுக்கு வரும் முன்பே பழையனூர் ஊராட்சியில் கட்டடப்பணி மற்றும் சாலைப்பணி செய்ய வந்த வட மாநிலத்தவர் தங்குமிடமாக மாறி உள்ளது. இதனால் நெல் தரம் பிரிக்கும் கூடம் அசுத்தமாவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
மேலும் அரசு சார்பில் விவசாயிகள் நலனுக்காக கட்டப்பட்ட கூடம் பயன்பாட்டுக்கு வரும் முன் தங்குமிடமானதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.