/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிந்தலகுப்பம் குளம் பாழ் சீரமைப்பு பணி எப்போது-?
/
சிந்தலகுப்பம் குளம் பாழ் சீரமைப்பு பணி எப்போது-?
ADDED : ஆக 25, 2024 11:08 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது, சிந்தலகுப்பம் கிராமம். இங்கு, தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரம், 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் குளம் உள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன் வரை மக்களின் பயன்பாட்டில் இருந்த இக்குளம், அதன்பின், முறையான பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் சூழ்ந்து துார்ந்து போனது.
மழைக்காலத்தில் குளம் நிரம்பினாலும், அடுத்த சில நாட்களில் தண்ணீர் வற்றிவிடும் நிலையே நீடிக்கிறது.
மேலும், அந்த பகுதியில் உள்ள கடைகளின் கழிவுகள் அனைத்தும் இக்குளத்தில் குவிக்கப்படுகின்றன.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், மழைக்கு முன் குளத்தை துார் எடுத்து, சாலையோர பகுதியில் தடுப்பு அமைத்து, குப்பை குவிப்பதை தடுத்து, குளத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.