/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் கண்காணிப்பு
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் கண்காணிப்பு
சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் கண்காணிப்பு
சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் கண்காணிப்பு
ADDED : ஆக 18, 2024 11:11 PM
திருவள்ளூர்: தமிழகம் முழுதும் உள்ள பத்திரபதிவாளர் மற்றும் சார் - -பதிவாளர் அலுவலகங்களில் சிலவற்றில் லஞ்சம் மற்றும் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் காலை திருவள்ளூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக அலுவலகத்தின் வெளியே நின்று, இடைத்தரகர்கள் யாரேனும் பத்திரபதிவு செய்ய வரும் நபர்களிடம் பேரம் பேசுகின்றனரா என்பது குறித்து 15 நிமிடங்கள் மக்களோடு மக்களாய் நின்று கண்காணித்தார். பின் அலுவலகத்தின் உள்ளே சென்று பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்தார்.
அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டுமென உத்தரவிட்டு சென்றார்.