/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு உதவித்தொகையுடன் திறன் வளர் பயிற்சி
/
வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு உதவித்தொகையுடன் திறன் வளர் பயிற்சி
வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு உதவித்தொகையுடன் திறன் வளர் பயிற்சி
வேலைவாய்ப்பு இல்லாதோருக்கு உதவித்தொகையுடன் திறன் வளர் பயிற்சி
ADDED : மார் 09, 2025 03:04 AM
திருவள்ளூர்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகையுடன் திறன் வளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில், 'நான் முதல்வன் மற்றும் பி.எம்.ஐ.எஸ்.,' பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தரம் வாய்ந்த பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோர், https://candidate.tnskill.tn/gov/in/skillwallet/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
முதன்மை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தானியங்கி, வங்கி, நிதிச் சேவைகள், தகவல் மற்றும் மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில், 12 மாத கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும். 10 மற்றும் பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப் படிப்பு முடித்த 21 - 24 வயது வரை உள்ள மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.
மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாளை மறுநாள் நடைபெறும் சேர்க்கை முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு மாதம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 87784 52515, 94441 39373 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.