/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
/
நெடுஞ்சாலையில் புகைமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 23, 2024 10:10 PM

கனகம்மாசத்திரம்:திருவாலங்காடு ஒன்றியம் கூளூர் ஊராட்சியில் சென்னை -- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது.
தற்போது அறுவடை முடிந்த நிலையில், கரும்பின் சக்கைகளை அறுவடை செய்த நிலத்தில் விவசாயிகள் தீ வைத்து எரிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 50,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் நிலையில் சாலையோரம் உள்ள விவசாய நிலங்களில் எரிக்கப்படும் கரும்பு சக்கையால் உருவாகும் புகையால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவர்கள் அவதியடைகின்றனர்.
மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்களில் துாசு விழுவதால், வாகனம் கட்டுப்பாட்டை இழுந்து தாமாக விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் அறிவுறுத்தி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

