/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலத்தை ஒட்டி மண் அரிப்பு இணைப்பு துண்டிக்கும் அவலம்
/
பாலத்தை ஒட்டி மண் அரிப்பு இணைப்பு துண்டிக்கும் அவலம்
பாலத்தை ஒட்டி மண் அரிப்பு இணைப்பு துண்டிக்கும் அவலம்
பாலத்தை ஒட்டி மண் அரிப்பு இணைப்பு துண்டிக்கும் அவலம்
ADDED : ஆக 29, 2024 02:06 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமம் வழியாக கரடிபுத்துார் ஏரியில் இருந்து சிறுவாடா ஏரிக்கு உபரி நீர் செல்லும் கால்வாய் உள்ளது. கண்ணன்கோட்டை சாலைக்கும், தேர்வாய் கண்டிகை விவசாய நிலங்களுக்கும் இடையே அந்த கால்வாய் அமைந்துள்ளது.
கால்வாயை கடந்து விவசாயிகள் சென்று வர வழி இருந்தும், டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, 2023ம் ஆண்டு கால்வாய் மீது இரு இடங்களில், நீர்வளத்துறையினர் சார்பில் பாலம் அமைக்கப்பட்டது.
அதில், தேர்வாய்கண்டிகை நீரேற்று நிலையம் எதிரே உள்ள பாலத்தை ஒட்டி, இணைப்பு பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பெருமளவு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் பாலம் துண்டிக்கும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, மழைக்கு முன், பாலத்தின் இணைப்பு சாலையை பலப்படுத்த நீர்வளத்துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வாய் கிராம விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.