/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தென்னிந்திய யோகா போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்..
/
தென்னிந்திய யோகா போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்..
தென்னிந்திய யோகா போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்..
தென்னிந்திய யோகா போட்டி அரசு பள்ளி மாணவி அசத்தல்..
ADDED : ஆக 13, 2024 07:06 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும், கைரளி யோகா வித்யா பீடம் சார்பில், 18ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தன.
இதில், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த, 1,300 பேர் பங்கேற்றனர்.
இதில், பெண்களுக்கான போட்டியில், காரைக்கால் காமராஜர் அரசினர் நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி என்.லலிதாம்பிகை, 13, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இவர், ஸ்ரீ சண்முகா யோகாஸ்ரமம் பயிற்சி மைய மாணவி.
ஆண்கள் பிரிவில், ஆவடியில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 1 மாணவர் எஸ்.நவநீத கணபதி, 16, சாம்பியன் பட்டம் வென்றார்.
இவர், மஹரிஷி பதஞ்சலி யோகா மைய மாணவர். இருவருக்கும் சாம்பியன் கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.