/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் இருளர்களுக்கு சிறப்பு முகாம்
/
திருவாலங்காடில் இருளர்களுக்கு சிறப்பு முகாம்
ADDED : ஆக 30, 2024 08:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரராகவபுரம், காட்ராயகுண்டா, அரிசந்திராபுரம் உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, மருத்துவ காப்பீடு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகளை பெற சிறப்பு முகாம் நேற்று திருவாலங்காடு அம்பேத்கர் நகரில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்தது.
திருத்தணி ஆதிதிராவிட நலன் தாசில்தார் மதியழகன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். இதில் 210 பேர் பல்வேறு சான்றுகள் வேண்டி பதிவு செய்தனர்.