/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்
/
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் சிறப்பு முகாம்
ADDED : ஆக 19, 2024 11:15 PM
சென்னை: தென் சென்னை, வட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான, சிறப்பு முகாம் இன்று முதல் 23ம் தேதி வரை நடக்க உள்ளது.
தென் சென்னைக்கு, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்; கே.கே.நகரில் உள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையம்.
அடையாறு புனித லுாயிஸ் செவித்திறன் மற்றும் பார்வைத் திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி; தேனாம்பேட்டை சிறுமலர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கும்.
வட சென்னை மாவட்டத்தில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்; திருவொற்றியூர் அன்பாலாயா அறிவுசார் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி; அண்ணாநகர் மேரி கிளப் வாலா செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளியில் முகாம் நடக்கும். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்; மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள, முக்தி செயற்கை அவயங்கள் நிலையம்; காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்.
குன்றத்துார் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி; திருவள்ளூர் மாவட்டத்திற்கு, திருவள்ளூரில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், பூந்தமல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில், காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடக்கும்.
பார்வை மாற்றுத்திறனாளிகள், தங்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மொபைல் போன், யு.டி.ஐ.டி., அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றுடன் நேரில் பங்கேற்று பயன்பெறவும் என, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் லட்சுமி தெரிவித்துள்ளார்.