/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஆக 21, 2024 09:20 PM
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 24ல் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் கலெக்டர் அலுவலக வளாகம், மக்கள் குறைதீர் கூட்டரங்கில் வரும் 24 காலை 10:00-மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. முகாமில் அமேசான், பிரைட் பியூச்சர், டாக்டர் ரெட்டி பவுண்டேஷன், இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட், மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன், முருகப்பா, ரெபெல் புட்ஸ்; ரிலையன்ஸ் ரீடெய்ல், ஷங்கர் என்.பி.ஜப்பான் பிரைவேட் லிமிடெட், ஸ்பேக் ஆட்டோமோட்டிவ்ஸ், தாங்க்யூ, யூத் பார் ஜாப், இன்சுரா போன்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய ஆதார், ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.