/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
/
அரசு அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : மார் 09, 2025 03:04 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இதய நோய் மருத்துவம், எலும்பு மூட்டு மருத்துவம், பல், தோல் நோய், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் எக்ஸ்ரே, இ.சி.ஜி., மற்றும் கர்ப்பிணியருக்கு ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதில், சுகாதார அலுவலர்கள் பிரியா ராஜ் - திருவள்ளுர், பிரபாகர் - பூந்தமல்லி உட்பட பலர் பங்கேற்றனர்.