/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அருமந்தை சாலையில் வேகத்தடை சிவப்பு கொடி கட்டி எச்சரிக்கை
/
அருமந்தை சாலையில் வேகத்தடை சிவப்பு கொடி கட்டி எச்சரிக்கை
அருமந்தை சாலையில் வேகத்தடை சிவப்பு கொடி கட்டி எச்சரிக்கை
அருமந்தை சாலையில் வேகத்தடை சிவப்பு கொடி கட்டி எச்சரிக்கை
ADDED : மார் 15, 2025 02:09 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த அருமந்தை - ஞாயிறு நெடுஞ்சாலையில் உள்ள மாபுஸ்கான்பேட்டையில் அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், வேகத்தடையை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக சென்று, வேகத்தடையில் மோதி நிலை தடுமாறி விழுந்து சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை கண்டு, கிராமவாசிகள் வேகத்தடைக்கு சிவப்பு வர்ணம் பூசினர். தொடர் வாகன போக்குவரத்தால் வர்ணம் மங்கி, வேகத்தடை இருப்பதே தெரியவில்லை. தற்போது, வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும் வகையில், அங்குள்ள கம்பத்தில் சிவப்பு கொடி கட்டி வைத்துள்ளனர்.
இரவு நேரங்களில் இதுவும் தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் சிரமம் தொடர்கிறது. இப்பகுதியில் உள்ள வேகத்தடைக்கு, வர்ணம் பூசி ஒளிரும் ரிப்ளக்டர்கள் மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.